ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரமாக போராடிய மருது சகோதரர்களின் 224-வது குருபூஜை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில், முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் எதிரே உள்ள மருது சகோதரர் நினைவிடத்தில் அவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு வெள்ளிக் கலசம் வழங்கி மரியாதை செலுத்தினார்.
விழா முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தி.மு.க-வுக்கு ஏன் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்றால், அனைத்து எதிர்க்கட்சிகளும் தற்போது பிரிந்து கிடக்கின்றன. அந்த நிலை காரணமாக, தி.மு.க-வுக்கு வாய்ப்பு இருக்கிறது என பொதுமக்களே பேசுகிறார்கள்; நான் பேசவில்லை,” என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வத்தின் இந்தக் கருத்து, மாநில அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Leave a Reply