பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த ‘துரந்தர் 2’ – ரசிகர்கள் பாராட்டு மழை

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் ‘துரந்தர் 2’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதற்கு முன்பாக நேற்று கட்டண ப்ரீமியர் காட்சிகள் நடத்தப்பட்டன.

ஆனால், அந்த ப்ரீமியர் காட்சிகள் திட்டமிட்ட நேரத்தில் தொடங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து படம் சீராகவும் வெற்றிகரமாகவும் திரையிடப்பட்டு வருகிறது.

முதல் பாகம் தியேட்டர் வெளியீட்டில் மட்டும் ரூ.1300 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்ததால், இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதல் பாகத்தில் நடித்த அக்ஷய் கன்னா இந்தப் பகுதியில் இல்லாவிட்டாலும், ரன்வீர் சிங் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோரின் நடிப்பு பாராட்டுகளை பெற்றுள்ளது.

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் ஆதித்யா தார் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஊரி தாக்குதல் போன்ற முக்கிய நிகழ்வுகள் காட்சியாக அமைந்துள்ளன.

படத்தின் முதல் பாதி சற்றே மெதுவாக நகர்ந்தாலும், அதன் பின்னர் வேகம் அதிகரித்து, குறிப்பாக இடைவேளைக்கு பிறகு கதை சுவாரஸ்யமாக மாறுகிறது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும், முதல் பாகத்தை பார்த்தவர்களுக்கு இரண்டாம் பாகத்தில் பல அதிர்ச்சி திருப்பங்கள் இருப்பதாகவும், முதல் பாகம் பார்க்காதவர்களுக்கு கதை முழுமையாக புரிய சிரமம் இருக்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *