இளைஞர்கள் குறித்து நீதிபதி சூர்யகாந்த் கருத்து.. ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ பிரசாரம் வைரல்!
இளைஞர்கள் மற்றும் கரப்பான் பூச்சிகளை ஒப்பிட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துகளைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janata Party – CJP) என்ற பெயரில் நையாண்டி பிரசாரம் வைரலாகி வருகிறது.
ஆனால், தாம் தெரிவித்த கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களை அவமதிக்கும் நோக்கம் இல்லை என்றும் நீதிபதி சூர்யகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தை மையமாகக் கொண்டு சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களையும் மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர். அதில் முக்கியமாக பேசப்படுவது ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இணையதளம்.
அந்த இணையதளத்தை உருவாக்கியவர் அபிஜித் தீப்கே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “கருத்து சுதந்திரத்தையும் பேச்சுரிமையையும் பாதுகாக்க வேண்டிய உயரிய பதவியில் இருப்பவர் இளைஞர்களை கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டதாக தோன்றியது அதிர்ச்சியளித்தது. அதற்கு எதிர்ப்பாகவே இந்த சமூக ஊடக பிரசாரத்தை தொடங்கினேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், அரசை அல்லது அமைப்புகளை விமர்சிப்பவர்களை இவ்வாறு சித்தரிப்பது ஜனநாயக மனப்பான்மைக்கு எதிரானது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.












Leave a Reply