ரஷ்யாவின் விமானத் தாக்குதலால் உக்ரைன் தலைநகரில் கடும் அழிவு – 4 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்யா மேற்கொண்ட வான்வழித் தாக்குதலால் உக்ரைன் தலைநகர் கீவின் பல பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன. குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக மையங்கள் தாக்குதலுக்கு உள்ளாக, பல வாகனங்கள் தீக்கிரையானது. மக்கள் அதிகம் திரளும் சந்தை அருகே நடந்த தாக்குதலால் அங்கிருந்தோர் பரபரப்புடன் தப்பிச் சென்றனர்.

தாக்குதலின் தீவிரத்தால் பல கட்டடங்கள் எரிவதைக் கண்ட தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீப்பற்றிய இடங்களில் சிக்கியிருந்த பூனைக் குட்டிகளை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நால்வர் உயிரிழந்ததுடன், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *