விசிக முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “நேற்று வரை ஒரு நடிகரை ‘ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக உருவாக்கியவர்’ என கடுமையாக விமர்சித்தவர், இன்று அதே நபருக்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாடு எடுப்பது, இதுவரை சமரசமின்றி பேணப்பட்ட கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது அறிக்கையில், அம்பேத்கர், பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்றதில் திருமாவளவனின் பங்கு முக்கியமானது என்றும், ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் அதிகாரத்தை நோக்கி ஒருங்கிணைத்த தலைவராக அவர் திகழ்ந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அம்பேத்கரின் “கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்” என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு சாதி மற்றும் மதவெறி சக்திகளுக்கு எதிராக சமரசமின்றி போராடியவர் திருமாவளவன் என்ற நம்பிக்கையில் இருந்ததாகவும், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைப்பாடுகள் ஏமாற்றமளிப்பதாகவும் பனையூர் பாபு தெரிவித்துள்ளார்.












Leave a Reply