தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நன்னடத்தை விதிகள் இன்று (15.03.2026) முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் நாள் மற்றும் வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் 30.03.2026 (திங்கட்கிழமை) என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாள் 06.04.2026 (திங்கட்கிழமை) ஆகும். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் 07.04.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான இறுதி நாள் 09.04.2026 (வியாழக்கிழமை) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்குப்பதிவு 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 04.05.2026 (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் 06.05.2026 (புதன்கிழமை) அன்று நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தேர்தலுக்கான தேர்தல் நன்னடத்தை விதிகள் 15.03.2026 முதல் அமலுக்கு வந்துள்ளன. இவ்விதிகள் அனைத்து வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கும் பொருந்தும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *