பெண்களுக்கு மாதம் ரூ.2500, இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகள் – பீகாரில் திமுக மாதிரியைப் பின்பற்றிய “இந்தியா” கூட்டணியின் தேர்தல் அறிக்கை

பீகாரில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, “இந்தியா” கூட்டணி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் தமிழக அரசியலை நினைவூட்டும் வகையில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 நிதியுதவி, வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

தேஜஸ்வி யாதவ் தலைமையில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் மொத்தம் 25 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அதில் முக்கியமான 10 பாயிண்டுகள்.

1, வக்பு திருத்தச் சட்டம் பீகாரில் அமல்படுத்தப்படாது.

  1. ஆட்சிக்கு வந்த 20 நாளுக்குள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலை வழங்கும் சட்டம்.
  2. ஜீவிகா திட்ட பணியாளர்களுக்கு நிரந்தர அரசு பணியாளர் அந்தஸ்து மற்றும் ரூ.30,000 சம்பளம்.
  3. தகவல் தொழில்நுட்பம், விவசாயம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள்.
  4. சிறு மற்றும் குறு தொழில்களுக்கு ஒருங்கிணைந்த கொள்கை; கல்வி நகரம், தொழில் மண்டலம், புதிய விரைவுச்சாலைகள்.
  5. பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்.
  6. “மாய்-பெஹின் மான் யோஜனா” மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.2,500.
  7. விதவைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்ந்த மாதாந்திர ஓய்வூதியம்.
  8. வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்.
  9. மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் வட்டி வசூலில் கட்டுப்பாடு விதிக்கும் சட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *