அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்த ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி அன்புடன் அணைத்து வரவேற்றார்.
மூன்று நாள் அரசு முறை பயணத்தின் ஒரு பகுதியாக தனி விமானத்தில் வந்த புதினை, பிரதமர் மோடி நேரில் சென்று உற்சாகத்துடன் வரவேற்றார்.
ரஷ்யாவில் இருந்து புறப்பட்ட அதிபர் புதினின் விமானம் டெல்லி பாலம் விமானப்படை தளத்தில் தரையிறங்கியதும், ஆயுதப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் மோடி அவரை வரவேற்றார்.
புதினை ஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் மோடியின் வருகையையொட்டி இன்று இரவு ஹைதராபாத்தில் விருந்துவிழா நடைபெறுகிறது.
நாளை (5ம் தேதி) இரு நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்கும் 23வது ஆண்டு மாநாடு நடைபெற உள்ளது.
நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு புதின் இந்தியா வருகை மேற்கொண்டுள்ள நிலையில், டெல்லி முழுவதும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.











Leave a Reply