பீகாரில் அரசியல் அதிர்வு: நிதிஷ் குமார் ராஜினாமா செய்யும் வாய்ப்பு? பாஜக பவர் கேம் வேகம் — அமைச்சரவை அமைப்பில் பெரிய மாற்றம்.

பீகார் புதிய அமைச்சரவை இறுதி: நிதிஷ் குமார் தொடர்வு உறுதி — பாஜக பெறும் இடங்கள் அதிகம்

பீகாரில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 202 இடங்களில் வென்றது. பாஜக (89) மற்றும் ஜேடியு (85) ஆகிய இரு கூட்டணி கட்சிகளும் ஏறத்தாழ சம அளவு இடங்களை பெற்றதால், புதிய அமைச்சரவை அமைப்பு மற்றும் முதல்வர் பதவி குறித்து பெரும் ஆர்வம் உருவாகியிருந்தது. தற்போது இந்த விவகாரம் முழுமையாக இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 14ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முடிவில் என்டிஏ பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதன் பின்னர் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது, ஏனெனில் வாக்குப்பதிவுக்கு முன் ஒருவரையும் முதல்வர் வேட்பாளராக என்டிஏ அறிவிக்கவில்லை.

ஆனால், என்டிஏ வட்டாரங்கள் தெரிவிக்கிறதாவது — நிதிஷ் குமாரே தொடர்ச்சியாக முதல்வராகப் பதவியேற்பார். அமித் ஷா தலைமையில் இன்று நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதிய அமைச்சரவை — கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு

கட்சிகளுக்கான அமைச்சரவை இடங்களும் முடிவாகியுள்ளன:

  • பாஜக – 15 முதல் 16 அமைச்சர்கள்
  • ஜேடியு – சுமார் 14 அமைச்சர்கள்
  • லோக் ஜன் சக்தி (19 இடங்கள் பெற்றது) – 3 அமைச்சர்கள்
  • இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (5 இடங்கள்) – 1 அமைச்சர்
  • ராஷ்ட்ரிய லோக மோர்ச்சா (4 இடங்கள்) – 1 அமைச்சர்

புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நவம்பர் 19 அல்லது 20ஆம் தேதிகளில் நடைபெற வாய்ப்புள்ளது.

என்டிஏ வலுவான வெற்றி

  • மொத்தம் 243 தொகுதிகள்
  • என்டிஏ — 202 இடங்கள்
  • பாஜக — 89
  • ஜேடியு — 85

மகா கூட்டணியின் நிலை

‘மகா கூட்டணி’ (ஆர்ஜேடி + காங்கிரஸ் + இடதுசாரிகள்) 35 இடங்களையே பெற்றது:

  • ஆர்ஜேடி – 25
  • காங்கிரஸ் – 6
  • இதர இடதுசாரிகள் – 3

பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சூராஜ் 238 இடங்களில் போட்டியிட்டும் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில் ஓவைசியின் AIMIM 5 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *