தமிழ்நாட்டில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கரூரில் புதிய கல்லூரி அமைப்பு குறித்து லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் விரிவான பதில் வழங்கியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணி கேட்ட இந்த கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய ஆயுஷ் துணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், தமிழ்நாட்டில் தற்போது 16 சித்த மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றின் மாவட்ட வாரியான பட்டியல் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால், சித்தக் கல்வி துறையில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கரூர் – சித்த மருத்துவக் கல்லூரி தொடர்பான பதில்கள்
கேள்வி 1: தமிழ்நாட்டில் எத்தனை சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன? மாவட்ட வாரியாக விவரம்?
பதில்: மாநிலத்தில் மொத்தம் 16 சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றின் மாவட்ட வாரியான விவரம் அதிகாரப்பூர்வ இணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இரண்டும் அடங்கும்.
கேள்வி 2: கரூரில் புதிய சித்த கல்லூரி அமைப்பதற்கான திட்டம் உள்ளதா?
பதில்: ஆயுஷ் கல்வி நிறுவனங்களை அமைப்பது மாநில அரசின் பொறுப்பு. மத்திய அரசு நேரடியாக கல்லூரிகளை தொடங்குவதில்லை. எனவே கரூரில் புதிய கல்லூரி அமைப்பு தொடர்பான எந்தத் திட்டமும் மத்திய அளவில் இல்லை.
கேள்வி 3: திட்டம் இருந்தால் அதன் விவரங்கள், திறப்பு காலம்?
பதில்: தற்போது எந்தத் திட்டமும் இல்லாததால் காலவரிசை அல்லது செயல்பாட்டு விவரங்கள் இல்லை. புதிய கல்லூரி அமைப்பு தமிழ்நாடு அரசு முன்முயற்சி எடுத்தாலே சாத்தியமாகும்.
கேள்வி 4: கரூரில் ஏன் கல்லூரி அமைக்கப்படவில்லை?
பதில்: சுகாதாரம் மற்றும் கல்வி நிறுவன அமைப்பு மாநில அரசின் பொறுப்பு. மத்திய அரசு NAM திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கலாம், ஆனால் அதற்காக மாநில அரசு முன்மொழிவுகளை அனுப்ப வேண்டும். கரூரில் சித்த கல்லூரி அமைப்பதற்கான எந்த முன்மொழிவும் தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Leave a Reply