விஜயின் பிரசாரக் கூட்டத்துக்கு புதுச்சேரி போலீசார் அனுமதி.

டிசம்பர் 9 ஆம் தேதி புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தவெக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தை நடத்த காவல்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சம் 5,000 பேர் மட்டுமே கலந்துக்கொள்ள அனுமதி உண்டு. க்யூஆர் குறியீடு கொண்ட நுழைவுச்சீட்டுடையவர்களுக்கே அனுமதி வழங்கப்பட வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் கூட்டத்துக்கு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை; புதுச்சேரி குடியிருப்பாளர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்கலாம் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *