ஸோஹ்ரான் மம்தானியின் இந்திய பின்னணி
1991ஆம் ஆண்டு உகாண்டா தலைநகரான கம்பாலாவில் பிறந்த ஸோஹ்ரான் குவாமே மம்தானி, இந்திய வம்சாவளியைக் கொண்டவர். புரட்சியாளரும் கானாவின் முதல் பிரதமருமான குவாமே நக்ருமாவை நினைவுகூரும் வகையில் அவரது தந்தை “குவாமே” என்ற பெயரை நடுப் பெயராக வைத்தார்.
புகழ்பெற்ற இந்திய-அமெரிக்க திரைப்பட இயக்குநர் மீரா நாயர் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மஹ்மூத் மம்தானி ஆகியோர் அவரது பெற்றோர்.
பிள்ளைப் பருவத்தை கம்பாலாவில் கழித்த அவர், 5 வயதில் குடும்பத்துடன் தென்னாப்பிரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார். அங்கு அவரது தந்தை கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். தென் ஆப்ரிக்காவின் பழமையான செயிண்ட் ஜார்ஜ் கிராமர் பள்ளியில் மம்தானி ஆரம்பக் கல்வி முடித்தார்.
பின்னர் 7 வயதில் குடும்பம் நியூயார்க் குடிபெயர, அங்கு பிராங்க்ஸ் ஹை ஸ்கூல் ஆஃப் சயன்ஸ் பள்ளியில் கல்வி பெற்றார்.
2014ஆம் ஆண்டு அவர் போடன் கல்லூரியில் ஆப்ரிக்க ஆய்வுகளில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் 2018ஆம் ஆண்டு அமெரிக்க குடிமகனாக ஆனார்.












Leave a Reply