ஹோபார்ட் டி20 போட்டியில் சுந்தரின் அதிரடி – இந்தியா வெற்றி,
இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் சில முடிவுகள் மீண்டும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில், வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெற்றிருந்தும், அவருக்கு ஒரு ஓவரும் வீச வாய்ப்பு அளிக்கப்படாதது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
அவருக்குப் பதிலாக பகுதி நேர பந்துவீச்சாளர்களான சிவம் துபே மற்றும் அபிஷேக் ஷர்மா பயன்படுத்தப்பட்டனர். இருவரும் சேர்ந்து நான்கு ஓவர்களில் 56 ரன்கள் கொடுத்து அணியை சிக்கலில் தள்ளினர். இதனால், “சுந்தருக்கு வாய்ப்பு தரப் போவதில்லையெனில், ஏன் அவரை அணியில் சேர்த்தார்கள்?” என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், பந்துவீச முடியாத ஏமாற்றத்தை பேட்டிங்கில் வெளிப்படுத்திய சுந்தர், 23 பந்துகளில் 49 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமானார். 3 பவுண்டரி, 4 சிக்ஸர் அடித்த அவர், ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
முன்னதாக ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது. இந்தியா பதிலுக்கு துபே, சூர்யகுமார், திலக் வர்மா ஆகியோரின் சிறு பங்களிப்புகளுடன் விக்கெட்டுகள் இழந்தபோதும், சுந்தரின் வெடித்தெழும் ஆட்டத்தால் 18.3 ஓவர்களில் இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.












Leave a Reply