பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் பாஜக கட்டுப்படுத்துகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
பிகாரில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், புதன்கிழமை தனது பிரச்சாரத்தை தொடங்கிய ராகுல் காந்தி, முஷாபர்பூரில் நடந்த கூட்டத்தில் பேசி, சமூக நீதி என்ற கருத்தை தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கவில்லை என்று தெரிவித்தார்.
அத்துடன், அம்பேத்கர் உருவாக்கிய அரசியல்சாசனத்தை பிரதமர் நரேந்திர மோடியும் ஆர்.எஸ்.எஸ்-உம் தாக்குகின்றன என்றும், “அரசியல்சாசனத்தை யாராலும் அழிக்க முடியாது” என உறுதியளித்தார்.
அவர் மேலும், “வாக்குகளைப் பெற பிரதமர் மோடி எந்த காரியத்தையும் செய்வார்; ஆனால் தேர்தல் முடிந்ததும் அவர் காணாமல் போய்விடுவார்” என கடுமையாக விமர்சித்தார்.
தர்பங்காவில் நடந்த மற்றொரு கூட்டத்தில், “மகாகத்பந்தனின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்; நாங்கள் உருவாக்கப்போகும் அரசு அனைத்து சாதி, மதத்தவருக்கும் சமமானதாக இருக்கும்” என தெரிவித்தார்.
அதோடு, யமுனை நதியின் தூய்மையின்மையை ஒப்பிட்டு, “அங்கு மோடி ஒரு செயற்கை குளத்தை அமைத்து, தூய நீரை குழாய்களில் கொண்டு வந்து அதில் நீராடப்போகிறார் — இது முழுக்க ஒரு நாடகம்” எனவும் ராகுல் காந்தி கிண்டலாக கூறினார்.












Leave a Reply