கரூர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்த விஜய்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
இவர்களின் குடும்பத்தினருடன் முன்னதாக வீடியோ கால் மூலம் உரையாடி ஆறுதல் கூறிய விஜய், “விரைவில் நேரில் சந்திக்கிறேன்” என உறுதி அளித்திருந்தார். ஆனால் அனுமதி குறித்த சிக்கல்களால் சந்திப்பு தாமதமானது.
இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார். இன்று காலை மாமல்லபுரம் “போர் பாயிண்ட்ஸ்” ஓட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
நெரிசலில் காயமடைந்த 110 பேரும், அவர்களின் குடும்பத்தினருடன் விஜயை நேரில் சந்தித்து பேசினர். மொத்தம் 37 குடும்பங்களை சேர்ந்த 235 பேரை விஜய் தனித்தனி அறைகளில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
ஒவ்வொரு அறைக்கும் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர், அவர்களின் குடும்பத்தினரிடம் நேரில் ஆறுதல் கூறினார்.












Leave a Reply