வேளாண்மை, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வழிகாட்டி நூல்களை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் வெளியிட்டார்

நான்காவது தொழில்புரட்சிக்கான மையம், உலக பொருளாதார அமைப்பு ஆகியவற்றால் வழிநடத்தப்படும் இந்தியா 2030-க்கான ஏஐ என்ற முன்முயற்சியின் கீழ், 3 நூல்களை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய்குமார் சூத் வெளியிட்டார்.

இந்தியாவில், எதிர்கால வேளாண்மை: வேளாண்மைக்கான ஏஐ வழிகாட்டி நூல்

சிறுவணிகங்களில் மாற்றம்: இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான ஏஐ வழிகாட்டி நூல்.

அறிவுசார் யுகத்துக்கு ஏஐ பாதுகாப்பு பெட்டகச் சூழலை வடிவமைத்தல்: வெள்ளை அறிக்கை, ஆகியவை வெளியிடப்பட்ட 3 நூல்களாகும்.

இந்தியாவின் ஏஐ பயணம் அடித்தள நிலையில், மாற்றங்கள் ஏற்படுவதால் வரையறுக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு அனைவரையும் உள்ளடக்கியதாக, தாக்கம் நிறைந்ததாக மாற்றுவதற்கு தெளிவான உத்திகளை உரிய நேரத்தில் இந்த வழிகாட்டி நூல்கள் வழங்குகின்றன. மேலும், நமது விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் நாடு முழுவதும் உள்ள சமூகங்கள், உண்மையான பயன்களை அடைவதற்கு தொழில்நுட்ப முன்னேற்றங்களை அறிமுகம் செய்வதை இவை உறுதி செய்கின்றன என்று இந்த வழிகாட்டி நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் அஜய்குமார் சூத் தெரிவித்தார்.

புதிய திறன்களை வெளிக்கொண்டு வருவது சிறந்த முடிவுகளை மேற்கொள்வது மற்றும் ஒவ்வொரு விவசாயிக்கும் மகத்தான வளத்தை உருவாக்குவதில் ஏஐ எவ்வாறு தடையின்றி செயல்படுகிறது என்பதை இந்த வழிகாட்டி நூல் வெளிப்படுத்துகிறது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு கிருஷ்ணன் கூறினார்.

‘இந்தியாவில் எதிர்கால வேளாண்மை’ என்ற வழிகாட்டி நூல் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஏஐ பயன்பாடு பற்றி எடுத்துரைக்கிறது. விளைச்சலை அதிகரிப்பது, செயல்பாட்டு பிரச்சனைகளை நிர்வகிப்பது, சந்தை அணுகலை மேம்படுத்துவது ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அன்றாட வேளாண் பணி முடிவுகளில் தடையின்றி ஏஐ ஆலோசனைகளை ஒருங்கிணைக்க நம்பகமான உள்ளூர் வலையமைப்புகள் மற்றும் பிராந்திய மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதே போல் ‘சிறு வணிகங்களில் மாற்றம் செய்தல்’ என்பதற்கான வழிகாட்டி நூல், ஜனநாயகப்படுத்தப்பட்ட ஏஐ மூலம் இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும். உற்பத்தித் திறன், கடன் அணுகல், சந்தைக்கு செல்லுதல் ஆகியவற்றுக்கு தீர்வு காண உத்திசார்ந்த வழிகாட்டுதல்களை வழங்க உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *